நடுவானில் பயணிக்கு திடீர் உடல் நலக்குறைவு.. வலியால் துடித்த பயணிக்கு சிகிச்சை அளித்த மத்திய அமைச்சர்.!

0 3383

நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது உடல்நலக் குறைவு ஏற்பட்ட பயணிக்கு மத்திய அமைச்சர் B.K.Karad சிகிச்சை அளித்தார்.

டெல்லியில் இருந்து அவுரங்காபாத் சென்ற ஏர்இந்தியா விமானத்தில் பயணி ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். இதனைக் கண்ட விமானப் பணிப்பெண், விமானத்தில் டாக்டர்கள் யாரேனும் இருந்தால் சிகிச்சை அளிக்க வருமாறு கேட்டுக் கொண்டார்.

அப்போது விமானத்தில் இருந்த மத்திய இணை அமைச்சர் பி.கே.காரத்தும், முன்னாள் அமைச்சர் சுபாஷ் பாம்ரேவும் பயணிக்கு உடனடியாக சிகிச்சை அளித்தனர்.

இதற்கு நன்றி தெரிவித்து ஏர்இந்தியா ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. புகழ்பெற்ற அறுவை சிகிச்சை நிபுணரான பி.கே.காரத் அவுரங்காபாத்தில் சொந்தமாக மருத்துவமனை நடத்தி வருகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments