ரஷ்யாவுக்கு எதிரான போரில் உயிரிழந்த பிரபல சமூக ஆர்வலர்.. ரோமன் ரிதுஷ்னியை நினைவுகூர்ந்து பொதுமக்கள் மரியாதை..!

0 1386
ரஷ்யாவுக்கு எதிரான போரில் உயிரிழந்த பிரபல சமூக ஆர்வலர்.. ரோமன் ரிதுஷ்னியை நினைவுகூர்ந்து பொதுமக்கள் மரியாதை..!

உக்ரைனில் ரஷ்யாவுக்கு எதிரான போரில் உயிரிழந்த பிரபல சமூக ஆர்வலர் ரோமன் ரிதுஷ்னியை நினைவு கூர்ந்து தலைநகர் கீவில் உள்ள மெய்டன் சதுக்கத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கூடி மரியாதை செலுத்தினர்.

உக்ரைன் ஐரோப்பிய யூனியனில் இணைய வேண்டும் என வலியுறுத்தி ரோமன் ரிதுஷ்னி தனது பள்ளிப்பருவத்திலேயே  மெய்டன் சதுக்கத்தில் புரட்சிகரமான போராட்டம் நடத்தி பலரது கவனத்தையும் ஈர்த்தவர்.

இவர் கடந்த 9-ம் தேதி கார்க்கிவ் மாகாணத்தில் உள்ள இஸியம் நகரத்தில் ரஷ்ய படைகளின் தாக்குதலில் உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments