ஜே.சி.பி வாகனத்தை ஓட்டி இரண்டரை வயது சிறுவன் சாதனை.. விபரீத முயற்சி என போலீஸ் எச்சரிக்கை.!

0 4049

கின்னஸ் சாதனைக்காக திண்டுக்கல் அருகே இரண்டரை வயது சிறுவனை , எந்த ஒரு பாதுகாப்பு முன் ஏற்பாடும் இல்லாமல், மண் அள்ளும் ஜே.சி.பி வாகனத்தை ஓட்டச்செய்த தந்தையை காவல் துறையினரும், மருத்துவர்களும்  எச்சரித்துள்ளனர்

திண்டுக்கல் பழனி பைபாஸ் சாலையில் உள்ள குட்டத்து பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் தம்பதியினரான தாமஸ், ரோனி ஆகியோரின் இரண்டரை வயது மகன் தான் ஜேசிபி ஓட்டுவதற்கு பழக்கப்படுத்தப்பட்ட சிறுவன்..!

கடந்த 2003ஆம் ஆண்டு முதல் JCB வாகனத்தை விலைக்கு வாங்கி விவசாய பணிகளுக்கு வாடைக்கு விட்டு வரும் தாமஸ், அதற்கு உரிய உதிரி பாகங்களை விற்று வருவதால் அவற்றை கொண்டு விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் சிறிய அளவிலான ஜேசிபி, ஹிட்டாச்சி உள்ளிட்ட விவசாய கருவிகளை தயாரிக்கும் தொழிற்சாலையினை தனது வீட்டின் அருகிலேயே நடத்தி வருகிறார்.

இந்த தம்பதியினருக்கு இரு மகன்கள் உள்ளனர். இவர்களது இரண்டரை வயது மகன், தவழும் பொழுதிலேயே வீட்டின் சுவற்றை பிடித்துக்கொண்டு அருகில் உள்ள தனது தந்தையின் தொழிற்சாலைக்கு செல்வது வழக்கமாக இருந்துள்ளது.

நடை பழகிய உடன் தனியாக நடந்து சென்று அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் விவசாய எந்திரங்களில் ஏறி அமர்ந்து கொண்டு விளையாடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறான்.

ஒருகட்டத்தில் அந்த வாகனங்களை தானும் இயக்குவேன் என்று அடம் பிடிக்கவே , அவனை சமாதானப்படுத்த தவறிய தந்தை தாமஸ் தனது மடியில் வைத்து ஹிட்டாச்சி வாகனங்களை இயக்க கற்றுக் கொடுத்துள்ளார்.

நாளடைவில், "இளம் கன்று பயம் அறியாது "என்பது போல தானாகவே நடந்து சென்று தொழிற்சாலையில் நிற்கும் ஜேசிபி ஹிட்டாச்சி வாகனங்களை இயக்கியதாக அவரது தந்தை தெரிவித்தார்.

ஒரு கட்டத்தில் தந்தை தாமஸே தனது மகனுக்கு இந்த வாகனங்களை இயக்க பயிற்சி கொடுத்ததால், தற்பொழுது தானாகவே வயல்வெளிகளில் உள்ள ஹிட்டாச்சி ஜேசிபி வாகனங்களில் ஏறி, எந்த ஒரு பாதுகாப்பும் இன்றி அவற்றை இயக்கும் அளவிற்கு இரண்டரை வயது சிறுவன் பழக்கப்படுத்தப்பட்டுள்ளான்

தனது பிஞ்சு கைகளினால் ஹிட்டாச்சி வாகனத்தை இயக்கி அதனை கின்னஸ் சாதனையில் இடம் பெற செய்வதே தனது லட்சியம் என்று தந்தை தாமஸ் கூறும் நிலையில், இதனை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வியந்து பார்த்துச்சென்றாலும், இது அந்த சிறுவனை உடல் ரீதியாகவும் ,மன ரீதியாகவும் கடுமையாக பாதிக்கும் இத்தகைய விபரீத செயல்களை பெற்றோர் ஊக்கப்படுத்தக்கூடாது என்று எச்சரிக்கின்றார்.

மருத்துவர் சாம் இளங்கோ 18 வயதுக்கு குறைவான வயதுடைய சிறுவர்களை எந்த வாகனத்தை இயக்க வைத்தாலும் சட்டப்படி அது குற்றம் என்றும், இதற்கு காரணமான தந்தை மீது சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்கின்றனர் போக்குவரத்து காவல் அதிகாரிகள்

தந்தைக்கு சிறுவன் செய்வது சாதனையாக தெரியலாம், சட்டத்திற்கு முன்பு சிறுவன் பெரியவாகனங்களை இயக்குவது தண்டனைக்குரிய குற்றம் என்பதே கசப்பான உண்மை..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments