மது அருந்த பணம் தர மறுத்ததால் தொழிலதிபரை தாக்கி அவரது காரையும் அடித்து உடைத்த இளைஞர்கள்.!

0 3887

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே மது அருந்த பணம் தர மறுத்ததால் தொழிலதிபர் மீது தாக்குதல் நடத்திய 3 இளைஞர்கள், அவரது காரை அடித்து நொறுக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

குளச்சல் அடுத்த சரல்விளை பகுதியை சேர்ந்தவர் சேகர், வெளிநாட்டில் தொழில் செய்து வரும் இவர் விடுமுறைக்காக சொந்த ஊர் திரும்பினார்.

இந்நிலையில், நேற்று மாலை, கடைக்கு சென்றுக்கொண்டிருந்த சேகரை வழிமறித்த போதையில் இருந்த 4 இளைஞர்கள், அவரிடம் மது அருந்த பணம் கேட்டு தகராறு செய்ததோடு அங்கிருந்து செல்ல முயன்ற அவரை தாக்கினர்.

அதன் பின்னும் ஆத்திரம் குறையாததால் சேகரின் வீட்டிற்கு சென்று அவரது புதிய ஜீப் வகை கார், அலங்கார விளக்குகளை அடித்து நொறுக்கினர்.

இதுகுறித்த புகாரின் பேரில் குளச்சல் போலீசார் 4 இளைஞர்களை தேடி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments