எப்படி இருந்த என்னை.. இப்படி ஆக்கிட்டாங்க..! பந்து போல வீங்கிய முகத்துடன் நடிகை சுவாதி அவதி..!

0 7519
எப்படி இருந்த என்னை.. இப்படி ஆக்கிட்டாங்க..! பந்து போல வீங்கிய முகத்துடன் நடிகை சுவாதி அவதி..!

பல்வலிக்கு சிகிச்சைக்கு சென்ற இளம் நடிகை ஒருவருக்கு அதிக அளவு மயக்க மருத்து செலுத்தப்பட்டதால் முகம் பந்து போல வீங்கி பரிதாபமாக அவதிப்பட்டு வருகின்றார். மருத்துவரின் போலியான வாக்குறுதியால் 20 நாட்களாக தவிக்கும் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

பெங்களூரு ஜே.பி.நகரில் வசித்து வருபவர் நடிகை சுவாதி. இவர் தனியார் டிவி சேனல் ஒன்றில் வர்ணனையாளராக பணிபுரிந்துவந்தாலும் சில கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.

 சுவாதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பந்து போல வீங்கி அஷ்டகோணலான முகத்துடன் காணப்படும் தனது புகைப்படங்களை தற்போது தன்னுடைய நிலை என்று பகிர்ந்துள்ளார். அதற்கு யார் காரணம் என்பதையும் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 20 நாட்களுக்கு முன்பு சுவாதிக்கு பல் வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக ஹெண்ணூரில் உள்ள ஒரு தனியார் பல் மருத்துவமனைக்கு ஒன்றிற்கு சென்றார். அங்கு சுவாதிக்கு சிகிச்சை அளித்த டாக்டர் , மயக்க மருந்துக்கு பதிலாக வேறு ஒரு ஊசியை செலுத்தி கொள்ளும்படி கூறியதாக தெரிகிறது.

அதன்பேரில் அந்த ஊசியை செலுத்த சுவாதி அனுமதித்துள்ளார். இதன்பின்னர் சுவாதியின் முகம் ஒருபக்கமாக நன்றாக வீங்கிபோய் அவரது முகத்தின் அமைப்பு மாற தொடங்கி உள்ளது. இதனால் 2 மணி நேரத்தில் சரியாகி விடும் என்ற மருத்துவர் மறு நாள் சரியாகி விடும் என்றும் அது 2 நாள்... 4 நாள்... 6 நாட்கள் என்று கடந்து தற்போது 20 நாட்கள் கடந்தும் முகத்தில் வீக்கம் குறையாததால் கடந்த 20 நாட்களாக வெளியே வரவில்லை என்று குறிப்பிட்டுள்ளார் சுவாதி

தனக்கு சிகிச்சை அளித்த டாக்டரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது முக வீக்கம் விரைவில் சரியாகிவிடும் என்று கூறினாலும் தற்போது வரை தனது முகவீக்கம் சரியாகவில்லை என்பதால் மருத்துவமனையை தொடர்பு கொண்டு கேட்டாலும் யாரும் சரியாக பதில் சொல்வது இல்லை என்றும் சுவாதி குற்றச்சாட்டியுள்ளார்.

மேலும் தான் இனி பெங்களூரு மருத்துவர்களை நம்பபோவதில்லை என்றும் மும்பை சென்று சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாகவும், மருத்துவரின் தவறான சிகிச்சையால் முகமே முதலீடான தனது மீடியா வேலையையும் தான் பறி கொடுத்துள்ளதாக பரிதாபத்துடன் குறிப்பிட்டுள்ளார் நடிகை சுவாதி.

நடிகைகளுக்கு முகவெட்டு தான் திரைப்பட வாய்ப்புகளை பெற்றுத்தரும், சுவாதியின் முகமே ஒரு பக்கம் வெட்டுபட்டது போல இருப்பதால் அவரது திரையுலக வாழ்க்கையும் கேள்வி குறியாகி உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments