அதிமுக தலைமை அலுவலத்தில் ஜெயக்குமாருடன் வந்த இபிஎஸ் ஆதரவாளருக்கு அடி உதை.!

0 2617

அதிமுக தலைமை அலுவலத்தில் ஜெயக்குமாருடன் வந்த இபிஎஸ் ஆதரவாளர் ஒருவர் தாக்கப்பட்டார். தீர்மான குழு கூட்டத்தில் கலந்துக்கொள்வதற்காக ஓபிஎஸ் வந்த சிறிது நேரத்திற்குள் ஜெயக்குமாரும் கட்சி அலுவலகத்திற்கு வந்தார்.

ஏற்கனவே அவரின் கார் முற்றுகையிடப்பட்ட சம்பவத்தால் பாதுகாப்புடன் அவரை பலர் அலுவலகத்திற்குள் அழைத்துச் சென்றனர்.

ஆனால், சிறிது நேரத்திற்குள் மாரிமுத்து என்பவர் தலையில் ரத்த காயத்துடன் வெளியே வந்தார். தன்னை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தாக்கியதாக அவர் புகார் தெரிவித்தார்.

பின்னர் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க அவர் புறப்பட்டு சென்றார். தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று இபிஎஸ் உறுதி அளித்ததாக அவரை சந்தித்த பின்னர் மாரிமுத்து தெரிவித்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments