அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரம்.. ஈ.பி.எஸ். - ஓ.பி.எஸ். ஆகியோர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை

0 2245

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் குறித்த கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், முக்கிய நிர்வாகிகள் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். 

சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர், சி.வி.சண்முக, திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.அன்பழகன். மாஃபா. பாண்டியராஜன், உள்ளிட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த ஆலோசனை நள்ளிரவில் நிறைவு பெற்றது.


சென்னையில் தமது இல்லத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் மைத்ரேயன், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டார். முன்னதாக ஓ.பன்னீர் செல்வத்தை, துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இரட்டை தலைமையின் கீழ் கட்சி சிறப்பாக செயல்படும் என்றார்.

இன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். ஆகியோர் கலந்து கொள்வார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments