100 வயது தாயாரிடம் ஆசி பெற்றார் பிரதமர் மோடி

0 2638

பிரதமர் நரேந்திரமோடியின் தாயார் ஹீராபென்னின் 100 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரை நேரில் சந்தித்து பிரதமர் ஆசிப் பெற்றார்.

குஜராத்தில், காந்தி நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு இன்றுக்காலை சென்ற பிரதமர் தாயாருடன் சேர்ந்து பூஜையில் ஈடுபட்டார். பின்னர் தாயாருக்கு பாதபூஜை செய்து பிரதமர் ஆசிப்பெற்றார்.

தாயார் ஹீராபென்னுக்கு இனிப்பு வழங்கியும், மாலை மற்றும் சால்வை அணிவித்தும் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

பதிலுக்கு தாயார் ஹீராபென்னும் பிரதமருக்கு இனிப்பு கொடுத்து ஆசி வழங்கினார். பின்னர் இருவரும் சிறிது நேரம் நலம் விசாரித்து பேசிக்கொண்டிருந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments