பாடகர் சித்து மூசாவாலா கொலையை தாம் செய்யவில்லை.. தாம் திட்டமிட்ட போதும் தமது கூட்டாளிகள் கொன்று விட்டதாக பிஷ்னோய் வாக்குமூலம்..!

0 2195
பாடகர் சித்து மூசாவாலா கொலையை தாம் செய்யவில்லை.. தாம் திட்டமிட்ட போதும் தமது கூட்டாளிகள் கொன்று விட்டதாக பிஷ்னோய் வாக்குமூலம்..!

பஞ்சாப் பாடகர் சித்து மூசாவாலாவை தாம் கொல்ல நினைத்தது உண்மைதான் என்று ரவுடி தாதாவான லாரன்ஸ் பிஷ்னோய் ஒப்புக் கொண்டுள்ள போதும், தமது கூட்டாளிகள் சிலர் ரகசியமாகத் திட்டமிட்டு இக்கொலையை செய்ததாகக் கூறியுள்ளான்.

சிறப்புப் புலனாய்வுக் குழு அதிகாரிகள் பிஷ்னோயை மொஹாலிக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

சித்து மூசாவாவாவின் காரைப் பின் தொடர்ந்த கொலையாளிகளின் கார்கள் தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் காட்டி போலீசார் விளக்கம் கேட்டனர்.

பழிவாங்கும் நடவடிக்கையாக தாம் சித்துவை கொலை செய்ய நினைத்த போதும் தமது கூட்டாளிகள் சிலர் இக்கொலையை செய்துவிட்டதாக பிஷ்னோய் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments