அஸ்ஸாம், மேகாலயாவில் மூன்று நாட்களாகப் பெய்து வரும் கன மழை... 31 பேர் உயிரிழப்பு, வெள்ளத்தில் மூழ்கிய 3000 கிராமங்கள்

0 1235

அஸ்ஸாம் மற்றும் மேகாலயாவில் கடந்த மூன்று நாட்களாகப் பெய்து வரும் கனமழையால் 31 பேர் உயிரிழந்து விட்டனர். 3 ஆயிரம் கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

மக்கள் அவசர வேலை இருந்தால் மட்டும் வீட்டைவிட்டு வெளியே வருமாறு மாவட்ட நிர்வாகங்கள் அறிவுறுத்தி வருகின்றன. அஸ்ஸாம் மேகாலயா வில் வெள்ள பாதிப்பு பெருகி வருகிறது.

இரு மாநிலங்களிலும் பல பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு சாலைகள் மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன.பிரம்மபுத்திரா கௌரங்கா ஆகிய நதிகள் அபாய எல்லையைத் தாண்டி கரைபுரண்டு ஓடுகின்றன. அஸ்ஸாமில் 12 பேரும் மேகாலயாவில் 19 பேரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments