அரசுப் பணி வாங்கித் தருவதாகக்கூறி 100 பேரிடம் ரூ.3 கோடி மோசடி.. போலி பணி நியமன ஆணை வழங்கி உடைந்தையாக இருந்தவர் கைது..!

0 2979
அரசுப் பணி வாங்கித் தருவதாகக்கூறி 100 பேரிடம் ரூ.3 கோடி மோசடி.. போலி பணி நியமன ஆணை வழங்கி உடைந்தையாக இருந்தவர் கைது..!

சென்னையில் அரசு வேலை வாங்கித் தருவதாகக்கூறி போலி பணி நியமன ஆணைகளை கொடுத்து சுமார் 100 பேரிடம் மொத்தம் 3 கோடி ரூபாய் வரை மோசடி செய்த புகாரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மோகன்ராஜ் என்பவர் போலி கன்சல்டன்சி நடத்தி, ஆவின் உள்ளிட்டவற்றில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி அசல் கல்விச்சான்றிழை பெற்று மோசடி செய்ததாக தனசேகர் என்பவர் புகாரளித்திருந்தார்.

இதனை விசாரித்த போலீசார், இதேபோல் பலரிடம் தலா 15 லட்ச ரூபாய் வரை மோசடி செய்த மோகன்ராஜை கைது செய்த நிலையில், அவருக்கு உடந்தையாக இருந்து அரசு அதிகாரி போல் நடித்த புருசோத்தமன் என்பவரையும் கைது செய்தனர்.

அதேபோல், வெளிநாட்டில் பணி வாங்கித் தருவதாக ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த ஏஞ்சல் என்பவர் கைது செய்யப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments