அதிவேகமாக வந்த கார், இருசக்கர வாகனம் மீது மோதி பயங்கர விபத்து.. சுக்குநூறாக நொறுங்கிய இருசக்கர வாகனம்..!

0 4169
அதிவேகமாக வந்த கார், இருசக்கர வாகனம் மீது மோதி பயங்கர விபத்து.. சுக்குநூறாக நொறுங்கிய இருசக்கர வாகனம்..!

கேரள மாநிலத்தில் வேகமாக வந்த கார் ஒன்று மோதியதில் இருசக்கர வாகனம் சுக்குநூறாக நொறுங்கிய நிலையில், அதில் பயணித்த இளைஞர் படுகாயமடைந்தார்.

அம்மாநிலத்தின் மலப்புரம் அருகே காரத்தூர் பகுதியில் வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் புறப்பட்ட இளைஞர் சாலையில் சரிவர கவனிக்காமல் திரும்பினார். அப்போது, அவ்வழியே வேகமாக வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து அந்த இருசக்கர வாகனம் மீது மோதியது.

இதில், அந்த வாகனம் சுக்குநூறாக நொறுங்கியதை அடுத்து, அதனை ஓட்டிய இளைஞர் படுகாயமடைந்தார். கண்காணிப்பு கேமரா காட்சியின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments