நடிகர் விஜய் அலுவலகத்தில் வாயில் புரோட்டாவுடன் ஊழியர் சடலம் கண்டெடுப்பு..!

0 8851
நடிகர் விஜய் அலுவலகத்தில் வாயில் புரோட்டாவுடன் ஊழியர் சடலம் கண்டெடுப்பு..!

சென்னை பனையூரில் உள்ள நடிகர் விஜய்யின் அ.இ.த.வி.ம.இ அலுவலக வளாகத்தில் ஊழியர் ஒருவர் வாயில் புரோட்டாவுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் நடிகர் விஜய்யின்அ.இ.த.வி.ம.இ அலுவலகம் அமைந்துள்ளது. எளிதில் எவரும் உள்ளே ஏறி குதித்து புகுந்து விட இயலாத வகையில்10 அடி உயர கருங்கல் சுற்று சுவரில் பீங்கான் பதிக்கப்பட்டுள்ளது.

பெரிய இரும்பு கேட்டுகளுடன் அமைக்கப்பட்டுள்ள அந்த அலுவலகத்தில் உட்பகுதிகளை புதுமைபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இங்கு பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த பெயிண்டரான பிரபாகரன்என்பவர் கடந்த ஒரு மாத காலமாக பெயிண்ட் அடிக்கும் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வந்தார்.

கடந்த சனிக்கிழமையன்று சம்பளத்தை பெற்று கொண்டு தன்னுடைய குடும்பத்தினரை காணச் சென்ற பிரபாகரன் சம்பவத்தன்று இரவு 8 மணியளவில் குடிபோதையில் நடிகர் விஜய்யின் அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

அங்கிருந்த மேஸ்திரியிடம் தனக்கு பசிப்பதாகவும், புரோட்டா வாங்க 100 ரூபாய் தரும் படி கேட்டு பெற்று கொண்டு ஓட்டலுக்கு சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மறுநாள் காலையில் அலுவலக வளாகத்தின் சுவறை ஒட்டிய உள்பகுதியில் கையிலும் வாயிலும் பரோட்டாவுடன் பிரபாகரன் இறந்து கிடந்ததை பார்த்து சக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தகவல் அறிந்து வந்த கானத்தூர் போலீசார் பிரபாகரனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடிபோதையில் இருந்த பிரபாகரன் பரோட்டா சாப்பிட்டதில் உணவுக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்றும், உடற்கூறு ஆய்வின் அறிக்கை வந்த பிறகே இறப்பிற்கான முழுமையான காரணம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments