வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்ததாக 21 அரசு அதிகாரிகள் வீட்டில் சோதனை.. 42 இலட்ச ரூபாய் பறிமுதல்..!

வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்ததாகக் 21 அரசு அதிகாரிகள் வீட்டில் சோதனை.. 42 இலட்ச ரூபாய் பறிமுதல்..!
வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்த குற்றச்சாட்டில் கர்நாடகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பல துறைகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் 21 பேரின் வீடுகளில் ஒரே நேரத்தில் ஊழல் தடுப்புப் பிரிவினர் சோதனையில் ஈடுபட்டனர்.
பாகல்கோட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் வீட்டில் சோதனை நடத்திய ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கணக்கில் வராத 42 இலட்ச ரூபாயைப் பறிமுதல் செய்துள்ளனர்.
Comments