அக்னிபாதை திட்டத்திற்கான ஆள்சேர்ப்பு விரைவில் துவக்கம்.. வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள ராணுவ தளபதி வேண்டுகோள்..!

0 2065
அக்னிபாதை திட்டத்திற்கான ஆள்சேர்ப்பு விரைவில் துவக்கம்.. வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள ராணுவ தளபதி வேண்டுகோள்..!

ராணுவத்தில் 4 ஆண்டுகளுக்கு தற்காலிகமாக பணியாற்றும் அக்னிபாதை திட்டத்திற்கான ஆள்சேர்ப்பு விரைவில் துவங்கும் என ராணுவ தளபதி மனோஜ் பாண்டே அறிவித்துள்ளார்.

இது குறித்து டெல்லியில் பேசிய அவர், இன்னும் 2 நாட்களில் ராணுவத்தின் இணையதளத்தில் அறிவிப்பாணை வெளியிடப்படும் என்றார்.

மேலும், இந்தாண்டு டிசம்பர் மாதத்தில் அக்னிபாதை திட்டத்தில் இணையும் அக்னிவீரர்களுக்கான பயிற்சிகள் தொடங்கும் என குறிப்பிட்ட ராணுவ தளபதி, இந்த வாய்ப்பினை இளைஞர்கள் பயன்படுத்திக் கொண்டு ராணுவத்தில் இணைய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments