இன்று ஒருநாள் எந்தவொரு நிலையத்துக்கும் 5 ரூபாய் கட்டணத்தில் செல்லலாம்.. மெட்ரோ ரயில் நிர்வாகம் அதிரடி ஆஃபர்

கொச்சி மெட்ரோ ரயில் சேவை தொடங்கி ஐந்தாண்டு நிறைவடைந்ததையொட்டி இன்று ஐந்து ரூபாய்க் கட்டணத்தில் எந்த நிலையத்தில் இருந்தும் எந்த நிலையத்துக்கும் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளத்தின் கொச்சியில் ஆலுவா முதல் பேட்டை வரை 25 கிலோமீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் போக்குவரத்து 2017ஆம் ஆண்டு ஜூன் 17ஆம் நாள் தொடங்கியது.
இன்று ஐந்தாண்டு நிறைவடைவதால் எந்தவொரு நிலையத்துக்குச் செல்லவும் 5 ரூபாய் பயணச் சீட்டு எடுத்தால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments