நயன்தாரா பாட்டியா? மருத்துவருக்கு எதிராக பொங்கி எழுந்த சினம்யி..!

0 6212

நயன்தாராவை வயது கடந்து திருமணம் செய்திருப்பதாக விமர்சித்த மருத்துவருக்கு டுவிட்டரில் பாடகி சின்மயி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  40 வயதை கடந்த நயன் தாராவை பாட்டி என்று விமர்சித்த பின்னணி குறித்து  விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

தமிழ் திரையுலகின் முன்னணி நாயகியான நயன் தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் முடிந்த நிலையில் பல தரப்பினரும் வாழ்த்தி வந்த நிலையில் கடலூரை சேர்ந்த அறிவன்பன் திருவள்ளுவன் என்ற மருத்துவர், இவர்களது திருமணத்தை கேலி செய்தும் விமர்சிக்கும் வகையிலும் முக நூலில் பதிவு ஒன்றை வெளியிட்டதாக கூறப்படுகின்றது.

அந்த பதிவில் நயன் தராவின் நடிப்பு திறமைக்கு மதிப்பு தருகின்றேன், ஆனால் 40 வயது அதாவது பாட்டி வயசுல குடும்பம் , குழந்தை என அவரின் முடிவை நினைக்கும் போது சிரிப்புத்தான் வருகின்றது என்றும், அவருக்கு கருத்தரிப்பு மையங்கள் உதவி செய்யும்ன்னு நம்புவதாக கிண்டலுடன் தெரிவித்திருந்தார்

மருத்துவர் அறிவன்பனின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், நயன் தாரா மீதான விமர்சனத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாடகியும் மீடூ புகழ் போராளியுமான சின்மயி கடும் கண்டனம் தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் அந்த மருத்துவர் பதிவிட்ட கேலியான கருத்தையும் பகிர்ந்துள்ளார்.

மருத்துவருக்கு எதிராக சின்மயி வெளியிட்டுள்ள கண்டன பதிவில், மருத்துவக் கல்லூரிகளில் பாலின பாகுபாடு,மற்றும் பெண் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை நிபுணர்கள் எதிர் கொள்ளும் பாலினச்சார்பு குறித்து எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேசிக் கொண்டிருந்த போது இது கிடைத்தது. சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நடிகை குறித்து இந்த அற்புதமான மருத்துவர் பதிவிட்ட மோசமான கருத்து என்ற தெரிவித்துள்ளார்.

மருத்துவர் மற்றும் சின்மயியின் பதிவுகளுக்கு இடையே நயன்தாராவுக்கு 40 வயதா ? என்று நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments