முதியோர் உதவி தொகை வழங்க பயனாளிகளிடம் லஞ்சம் வாங்கியதாக ஒப்புக்கொண்ட கிராம நிர்வாக உதவியாளர்..!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே முதியோர் உதவி தொகை வழங்க பயனாளிகளிடம் லஞ்சம் வாங்கியதாக ஒப்பு கொண்ட கிராம நிர்வாக உதவியாளர் ஒப்புதல் வீடியோ சமூக வலைதளங்களில வைரலாகி வருகிறது.
செய்யார் வட்டம் மாளிகைபட்டு கிராமத்தில் முருகன் என்பவர் கிராம நிர்வாக உதவியாளராக பணியாற்றி வருகின்றார்.
இவர் முதியோர் மற்றும் விதவை உதவி தொகை பெறும் பயனாளிகளிடம் கட்டாயமாக லஞ்சப்பணம் வசூலித்ததாக கூறப்படுகிறது. இதனை கண்ட அதே பகுதியைச் சேர்ந்த தமிழ்செல்வன் என்பவர் முருகனிடம் லஞ்ச வசூல் குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்
Comments