இலங்கையில் அடுத்த 5 நாட்களுக்கு மட்டுமே எரிபொருள் கையிருப்பு

0 1527

இலங்கையில் அடுத்த 5 நாட்களுக்கு மட்டுமே எரிபொருள் கையிருப்புள்ளதால், இந்தியாவின் 500 மில்லியன் டாலர் கடன் உதவியை இலங்கை அரசு எதிர்பார்த்துள்ளது.

எரிபொருள் சப்ளை நிறுவனங்களுக்கு ஏற்கனவே 725 மில்லியன் டாலர் கடன் வழங்க வேண்டி உள்ளதால், மேற்கொண்டு புதிதாக கடன் பெற முடியாத சூழல் நிலவுவதாக மின் மற்றும் எரிசக்தித் துறை அமைச்சர் காஞ்சனா விஜெசேகரா தெரிவித்தார்.

இந்திய எக்சிம் வங்கியின் 500 மில்லியன் டாலர் கடன் உதவி உறுதிக்காக காத்திருப்பதாகவும் அதைக் கொண்டு எரிபொருள் கொள்முதல் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments