யாராவது இருக்கீங்களா.. பயமா இருக்கு…! மாணவர் இல்லா பள்ளி பணியில் இரு ஆசிரியர்கள் ..!

0 9533
யாராவது இருக்கீங்களா.. பயமா இருக்கு…! மாணவர் இல்லா பள்ளி பணியில் இரு ஆசிரியர்கள் ..!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள அரசு உதவிபெறும் துவக்கப்பள்ளி ஒன்றில் ஒரு மாணவர் கூட படிப்பதற்கு வராததால், அந்த பள்ளிக்கூடத்தை திறந்து வைத்துவிட்டு அங்கு பணிபுரியும் இரு ஆசிரியர்களும் சொந்த வேலையை பார்க்க வீட்டுக்கு சென்று விடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கண்டுகொண்டன்மாணிக்கம் கிராமத்தில் உபகார மாதா துவக்கப்பள்ளி என்ற அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது.

இப்பள்ளியில் கல்வியின் தரம் சரியில்லாததால் கடந்த சில வருடங்களாக மாணவர் சேர்க்கை எண்ணிக்கை படிப்படியாக குறைந்து கொண்டே வந்தது. இந்த நிலையில் கடந்த வருடம் 5 மாணவர்கள் மட்டும் பள்ளியில் பயின்ற நிலையில் அவர்களும் பள்ளியை விட்டு சென்றுவிட்டனர்.

இந்த வருடம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் சூழ்நிலையில் ஒப்புக்கு கூட ஒரு மாணவரும் இல்லை..! அரசு பணத்தில் சம்பளம் பெற்றுக் கொண்டு, அங்கு பணியில் இருக்கும் , இரு ஆசிரியர்களும் பள்ளியை திறந்து வைத்துவிட்டு எங்காவது சென்று விடுகின்றனர்

அப்பகுதி மக்கள் கூறும் போது , பள்ளியில் ஒரு மாணவர் கூட இல்லாததால் பள்ளியை காலை திறந்து போட்டு விட்டு பொறுப்பில்லாமல் தங்களது சொந்த வேலையை பார்க்க சென்று விடும் அந்த இரு ஆசிரியர்களும், மாலையில் திரும்பி வந்து பொறுப்பாக பள்ளியை பூட்டி விட்டு மட்டும் செல்வதாக தெரிவித்தனர்.

இப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் இடையே நடக்கும் பனிப்போர் காரணமாக இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இப்பள்ளி ஆசிரியர்கள் சரிவர பாடம் நடத்தாமலும் புதிய மாணவர் சேர்க்கைக்கு முயற்சி எடுக்காமல் இருப்பதன் காரணமாக இப்பள்ளியின் மொத்த மாணவர் எண்ணிக்கை தற்போது பூஜ்யமாக மாறி இருப்பதாக கூறப்படுகின்றது.

இதோ போல தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பெரும்பாலான அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும், தாளாளர்களுக்கும் இடையே பல்வேறு பிரச்சனை உள்ளதால் கல்வியின் தரம் குறைந்து மாணவர் சேர்க்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்வது குறிப்பிடதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments