இமாச்சலில் இரண்டு நாட்களாக கனமழை - நிலச்சரிவு.. இடிபாடுகளில் சிக்கிய 8 விவசாயிகள் ராணுவத்தால் மீட்பு..!

0 1954
இமாச்சலில் இரண்டு நாட்களாக கனமழை - நிலச்சரிவு.. இடிபாடுகளில் சிக்கிய 8 விவசாயிகள் ராணுவத்தால் மீட்பு..!

இமாச்சலப் பிரதேசம் குலுமனாலியில் பலத்த மழை காரணமாக நிலச்சரிவுகள் ஏற்பட்டன.

இதில் சுமார் 8 விவசாயிகள் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து ராணுவம் மீட்பு நடவடிக்கை மேற்கொண்டது. கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருகிறது.

இதனால் சாலைகள் சேதம் அடைந்துள்ளன.பல இடங்களில் நிலச்சரிவுகள் காணப்பட்டன. இந்த கொட்டும் மழையிலும் ராணுவத்தினர் 8 பேரை போராடி மீட்டனர்.

அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் உயிரிழந்ததாக ராணுவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments