ஓடும் ரயிலில் செல்போன் பறிக்க முயற்சி.. தராமல் போராடிய பெண் காவலரை ரயிலில் இருந்து தள்ளிவிட்டு தப்பியோடிய திருடன்..!

0 3147
ஓடும் ரயிலில் செல்போன் பறிக்க முயற்சி.. தராமல் போராடிய பெண் காவலரை ரயிலில் இருந்து தள்ளிவிட்டு தப்பியோடிய திருடன்..!

பீகார் மாநிலம் கத்திஹார் பகுதியில் ஓடும் ரயிலில் பெண் போலீஸ் காவலரிடம் செல்போனைப் பறிக்க முயற்சி செய்த ஒருவன், செல்போனைத் தராமல் போராடிய அவரை ரயிலில் இருந்து தள்ளிவிட்டு தப்பிச் சென்றான்.

ரயிலில் கூட்டம் குறைவாக இருந்ததால் அவன் எளிதாகத் தப்பிச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.

காயம் அடைந்த ஆர்த்தி குமாரி என்ற அந்தப் பெண் காவலர் 20 நிமிடங்களுக்குப் பிறகு மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments