60 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட தமிழக சிலைகள் அமெரிக்க அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டுபிடிப்பு

0 2500

கும்பகோணம் அருகே 60 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட இரு சிலைகள் அமெரிக்க அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிவகுருநாதன் சுவாமி கோவிலில் இருந்த சோமாஸ்கந்தர் மற்றும் தனி அம்மன் சிலைகள் திருடப்பட்டு, போலியான சிலைகள் மாற்றி வைக்கப்பட்டது தெரியவந்தது.

திருடப்பட்ட சோமாஸ்கந்தர் சிலை அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள நார்டன் சைமன் மியூசியத்திலும், அம்மன் சிலை அமெரிக்காவின் டென்வர் மியூசியத்தில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த இரு சிலைகளை மீட்கும் பணியில் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments