என்னய உள்ள போடு.. அடி… அடிச்சி கொல்லு.. போலீசிடம் பொங்கிய போதையன்..! விருந்து வைத்த போலீசார்..!

0 2886
என்னய உள்ள போடு.. அடி… அடிச்சி கொல்லு.. போலீசிடம் பொங்கிய போதையன்..! விருந்து வைத்த போலீசார்..!

ராமநாதபுரம் அரசு மருத்துவமனை அருகே வாகன சோதனையின் போது போதையில் போலீசிடம் வலியச்சென்று வம்பிழுத்த குடிகார வாகன ஓட்டி ஒருவர், காவல் நிலையம் அழைத்துச்சென்று சிறப்பாக கவனித்த பின்னர் அமைதியானார்..

ராம நாதபுரம் அரசு மருத்துவமனை சாலையில் குடி போதையில் வாகனம் ஓட்டி வந்த போதை ஆசாமி ஒருவன், போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டான். தனது வாகனத்தை எப்படி நிறுத்தலாம் என்று கேட்டு பொங்கிய அந்த குடிகாரர் கையில் செல்போனை வைத்துக் கொண்டு போலீஸ் காரரிடம் வலிய சென்று உன்னை அடிப்பேன்.. என்று சவால் விட, பேச்சை குறைய்யா, இது அரசு மருத்துவமனை வெளியே போய் பேசு என்று அந்த போலீஸ் காரர் சாந்தமாக சொல்ல, தான்கொன்றுவேன்... எவனா இருந்தாலும் என்று லந்து கொடுத்தார் அந்த குடிமகன்.

போலீசுக்கு பயப்பட மாட்டேன்... என்றும் அடி அடிச்சி பாரு என்றும் எகத்தாளமாக அலப்பறை கொடுத்தார். இப்படி போலீசுக்கு சவால் விட்ட குடிகார சக்கரவர்த்தியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அவரது இல்லம் தேடிச்சென்று காவல் நிலையம் அழைத்துச்சென்ற காவலர்கள் , அவரது வாய் பசிக்கு தக்க விருந்து வைத்ததால், போதை தெளிந்ததும் மழையில் நனைந்த கோழிகுஞ்சு போல காவல் நிலையத்தில் தன் தவறுக்கு மனிப்பு கேட்டு நடுங்கும் நிலைக்கு தள்ளப்பட்டார் அந்த குடிமகன்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments