மாத மாமூல் கேட்டு திமுக பெண் கவுன்சிலர் மண்டை உடைக்கப்பட்ட சம்பவம்..! மடிப்பாக்கம் செல்வத்தின் மனைவிக்கு நடந்தது என்ன?

0 4090
மாத மாமூல் கேட்டு திமுக பெண் கவுன்சிலர் மண்டை உடைக்கப்பட்ட சம்பவம்..! மடிப்பாக்கம் செல்வத்தின் மனைவிக்கு நடந்தது என்ன?

சென்னை மடிப்பாக்கத்தில் திமுக பெண் கவுன்சிலரின் மண்டை உடைக்கப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சொந்த கட்சிக்காரர்களால் அவரது கணவர் செல்வம் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் செல்வத்தை காதலித்து மதம் மாறி திருமணம் செய்து கொண்ட அவரது மனைவி மாமியாரால் தாக்குதலுக்குள்ளான பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

சென்னை மடிப்பாக்கம் திமுக பிரமுகர் செல்வம் உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவரது கொலை தொடர்பாக அவருக்கு நெருக்கமான கட்சியினர் மற்றும் கூலிப்படையினர் என 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

செல்வம் கொலை செய்யப்பட்டதால் அவரை காதலித்து மதம் மறுப்பு திருமணம் செய்து கொண்ட அவரது மனைவி சமீனாவுக்கு மாநகராட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. அவரும் தேர்தலில் போட்டியிட்டு கவுன்சிலராக வெற்றி பெற்றார்

கவுன்சிலரான பின்னர் சமீனாவுக்கும் அவரது மாமியாருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. சமீனா வேறு மதத்தை சேர்ந்தவர் என்பதை சுட்டிக்காட்டி ஆரம்பித்த தகராறு மாதம் தோறும் பணம் கேட்டு மிரட்டும் அளவுக்கு சென்றுள்ளது. இதனால் மாமியார் மருமகள் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments