அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் - ஒபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனியாக ஆதரவாளர்களுடன் ஆலோசனை

0 2385
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் - ஒபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனியாக ஆதரவாளர்களுடன் ஆலோசனை

அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஒபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனியாக ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினர்.

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள ஓ.பன்னீர் செல்வம் இல்லத்தில் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம், நத்தம் விஸ்வநாதன், புதிய எம்பியாக தேர்வான தர்மர் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.

இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், எம்.ஆர் விஜயபாஸ்கர், திண்டுக்கல் சீனிவாசன், தளவாய்சுந்தரம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.

பின்னர் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் ஒபிஎஸை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments