கடையில் மரம் அரவை இயந்திரத்தை திருடிய நபர் மீது சரமாரி தாக்குதல்

0 1930
கடையில் மரம் அரவை இயந்திரத்தை திருடிய நபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த கடை உரிமையாளர்

திருவண்ணாமலை நகர மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு கடையில் மரம் அரவை இயந்திரத்தை திருடிய நபரை பிடித்து கடை உரிமையாளரும், பொதுமக்களும் சேர்ந்து கம்பத்தில் கட்டி வைத்து அடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்.

பெங்களூர் பவர் டூல்ஸ் கடையில் 2 நாட்களுக்கு முன் மரம் அரவை இயந்திரம் மாயமானதால், கடையில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் ஒருவர் அரவை இயந்திரத்தை திருடிச் சென்றது பதிவாகியிருந்தது.

இந்நிலையில், இன்று காலையும் அக்கடைக்கு அந்த மர்மநபர் வந்ததை அறிந்த கடை உரிமையாளர், அவரை கையும் களவுமாக பிடித்த நிலையில் தகவலறிந்து வந்த போலீசார் அந்த நபரை விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்து சென்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments