சாலையில் அதிவேகமாக சென்ற காரை மடக்கி பிடித்த போலீசார்.. உள்ளே திறந்து பார்த்து அதிர்ச்சி..!

0 3477

அமெரிக்காவில், சாலையில் அதிவேகமாக சென்ற காரை போலீசார் விரட்டிச் சென்று திறந்து பார்த்த போது உள்ளே முதலை ஒன்று இருந்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.

மிச்சிகன் மாநில தேசிய நெடுஞ்சாலையில் அதிவிரைவாக சென்ற காரை நிறுத்துமாறு எச்சரித்தபடியே போலீசார் துரத்தி சென்றுள்ளனர். ஒரு கட்டத்தில் அந்த கார் பயன்படுத்தப்படாத ரயில் தடத்தில் இருந்த 2 மரங்களுக்கு இடையே சிக்கி கொண்டது.

ஓட்டுநரை பிடித்த போலீசார் காரில் சிறிய முதலை ஒன்று இருந்ததை கண்டறிந்தனர். காரை விட்டு வெளியேற முயன்ற அந்த முதலையையும் அவர்கள் பிடித்து சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments