2 வயது சிறுவனை அடித்து துன்புறுத்திய பணிபெண்ணை, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கைது செய்த போலீசார்.!

0 2865

மத்தியப்பிரதேச மாநிலம், ஜபல்பூரில் 2 வயது சிறுவனை அடித்து துன்புறுத்திய பணிபெண்ணை, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் கைது செய்துள்ளனர்.

ரஜினி சௌத்ரி என்ற அந்த 30 வயது பெண் சிறுவனின் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரங்களில் அந்த சிறுவனை கன்னத்தில் அறைந்தும், தலைமுடியை பிடித்து இழுத்தும் துன்புறுத்தியுள்ளார்.

சிறுவனின் உடல்நிலையில் பாதிப்புகள் ஏற்பட்டதால் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பெற்றோர் அதிர்ந்துப்போனார்கள். கடந்த 20ஆம் தேதி நடைபெற்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக, சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த பணிப்பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments