"யார் வந்தாலும் அடிப்பேன்... என்னை உள்ள தூக்கிப் போடு" காவலரை மிரட்டும் தொனியில் பேசிய இருசக்கர வாகன ஓட்டி!
இராமநாதபுரத்தில், மதுபோதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபர், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலரை மிரட்டும் தொனியில் பேசிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
அங்குள்ள அரசு மருத்துவமனை அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி விசாரித்துள்ளனர்.
மதுபோதை தலைக்கேறிய நிலையில் இருந்த அந்த நபர், காவலருடன் வாக்குவாதம் செய்ததோடு அவரை மிரட்டும் தொனியில் பேசியதை உடனிருந்த காவலர் ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.
Comments