தேனியில் ஊத்தாம்பாறை ஆற்றில் குளிக்கச் சென்ற போது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவரின் உடல் மீட்பு.!

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள ஊத்தாம்பாறை ஆற்றில் குளிக்கச் சென்ற போது திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவரின் உடல் மீட்கப்பட்டது.
போடி மின்வாரிய தற்காலிக ஊழியர்கள் 15 பேர் ஊத்தாம்பாறை பகுதியில் உள்ள ஆற்றில் குளிக்க சென்ற போது, எதிர்பாராவிதமாக தண்ணீரின் வேகம் அதிகரித்ததில், சுரேஷ்குமார் என்பவர் ஆற்றை கடக்க முயன்ற போது அடித்துச் செல்லப்பட்டார்.
அவரை தேடும் பணி இரண்டாவது நாளாக இன்று நடைபெற்ற நிலையில், பாறைகளுக்கு இடையே சிக்கியிருந்த சுரேஷ்குமாரின் உடல் மீட்கப்பட்டது. உடலை டோலி கட்டி கரைக்கு எடுத்து வந்த தீயணைப்புத்துறையினர், காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
Comments