கோயில் திருவிழாவில் இரு பிரிவினருக்கு இடையே மோதல் - கடை, வீடுகள் தீக்கிரை!

கும்பகோணம் அருகேயுள்ள ராஜகிரியில் நடைபெற்ற கோயில் திருவிழாவில், சாமியை யார் தூக்கிச் செல்வது என்பது தொடர்பாக இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில், ஒரு கடை மற்றும் இரு வீடுகள் எரிக்கப்பட்டன.
ராஜகிரி கரைமேல் அழகர் அய்யனார் கோயில் ஆண்டு திருவிழாவின் போது, இரண்டு பிரிவினருக்குள் பிரச்சனை ஏற்பட்டதாக தெரிகிறது. நள்ளிரவில் இரு பிரிவினருக்கிடையே மோதல் மூண்டது.
பதற்றத்தை தணிக்க போலீசார் குவிக்கப்பட்ட நிலையில், பாபநாசம் டிஎஸ்பி-யின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதுடன், எஸ்.ஐ ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, கலவர தடுப்பு வாகனங்கள் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளன
Comments