சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளான ஆம்னி பஸ்... புதுமாப்பிள்ளை, ஓட்டுநர் உள்பட 3 பேர் பலி.!

0 3062

தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் அருகே ஆம்னி பஸ் சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில் புதுமாப்பிள்ளை, ஓட்டுநர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். 

நாகர்கோவில் அடுத்த வடசேரியில் இருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்ட ஆம்னி பேருந்து கயத்தார் அடுத்த அரசங்குளம் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு மீது மோதி கவிழ்ந்தது.

விபத்தில் ஓட்டுநர் உள்பட 3 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments