நாட்டின் பொருளாதாரத்தைக் காக்க ஒரு கோப்பை தேநீரை குறைக்கவும்.. அமைச்சரின் கோரிக்கைக்கு நெட்டிசன்கள் கடுமையான எதிர்ப்பு..!

நாட்டின் பொருளாதாரத்தைக் காக்க ஒரு கோப்பை தேநீரை குறைக்கவும்.. அமைச்சரின் கோரிக்கைக்கு நெட்டிசன்கள் கடுமையான எதிர்ப்பு..!
பாகிஸ்தானியர்கள் தேநீர் குடிப்பதை குறைத்துக் கொள்ளுமாறு அந்நாட்டு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான், அதிலிருந்து எவ்வாறு மீட்பது என்று வழிதெரியாமல் தவித்து வருகிறது.
இந்நிலையில், அந்நாட்டின் திட்ட அமலாக்கத்துறை அமைச்சரான ஆசன் இக்பால் என்பவர், நாட்டின் பொருளாதாரத்தை காக்க தினமும் ஒரு கோப்பைத் தேநீரைக் குறைத்து உதவுமாறு வீடியோ மூலமாக மக்களுக்கு கோரிக்கை விடுத்தார்.
அமைச்சர் கோரிக்கை விடுத்த அடுத்த சில நிமிடங்களிலேயே, அரசின் இயலாமையைக் கிண்டலடித்தும் விமர்சித்தும் சமூக ஊடகங்களில் பதிவர்கள் பதிலடி கொடுக்கத் தொடங்கி விட்டனர்.
Comments