குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று துவக்கம்.. வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் கட்சிகள் மும்முரம்..!

0 1430
குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று துவக்கம்.. வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் கட்சிகள் மும்முரம்..!

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது. வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்ய பாஜகவும், எதிர்க்கட்சிகளும் தீவிரப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றன.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் அடுத்த மாதம் 24-ந் தேதி முடிகிறது. புதிய குடியரசுத் தலைவர் ஜூலை 25-ந் தேதி பதவி ஏற்க வேண்டும். அதற்குள் புதிய குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்ய வேண்டும்.

இதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18-ந் தேதி நடைபெறுவதையொட்டி, வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாக் கூட்டணியோ, எதிர்க்கட்சிகளோ தங்களது வேட்பாளரை இன்னும் முடிவு செய்யவில்லை. இது தொடர்பான ஆலோசனைகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

குடியரசுத் தலைவர் தேர்தலை நடத்தும் அதிகாரியாக மாநிலங்களவைச் செயலாளர் பி.சி.மோடி நியமிக்கப்பட்டுள்ளார். சிறப்பு பணி அதிகாரி முகுல் பாண்டே, இணைச்செயலாளர் சுரேந்திரகுமார் திரிபாதி ஆகியோர் துணை தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

குடியரசுத் தலைவர் தேர்தலுக்காக மாநிலங்களவையில் தனிப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில், மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்கள் 776 பேர், 4033 எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க உள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments