கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து உணவு ஒப்பந்தத்தை பாலாஜி சர்ஜிகல் நிறுவனம் பெற்றது ; அனிதா டெக்ஸ்காட்டிற்கு டெண்டர் ஒதுக்கீடு இல்லை - அமைச்சர் மா.சுப்ரமணியன்

0 1937
கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து உணவு ஒப்பந்தத்தை பாலாஜி சர்ஜிகல் நிறுவனம் பெற்றது

கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து உணவு ஒப்பந்தத்தை பாலாஜி சர்ஜிகல் என்ற நிறுவனம் பெற்றதாகவும், பாஜக தலைவர் அண்ணாமலை புகார் கூறிய அனிதா டெக்ஸ்காட் நிறுவனத்திற்கு டெண்டர் ஒதுக்கப்படவில்லை என்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் பேட்டியளித்த அவர், ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டு வைத்ததற்காக அண்ணாமலை வருத்தம் தெரிவிக்காவிட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும், பணி நேரத்தில் மருத்துவமனைக்கு வராத மருத்துவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments