ஒற்றைத் தலைமை தேவை என நிர்வாகிகள் வலியுறுத்தல்.. யார் அந்த ஒற்றை தலைமை..? ஜெயகுமார் பேட்டி

0 2541
அதிமுகவில் ஒற்றைத் தலைமையை கொண்டு வருவது குறித்து மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமையை கொண்டு வருவது குறித்து மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

இதில், வரும் 23ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுக் கூட்டம் உள்ளிட்டவை பற்றி விவாதிக்கப்பட்டது. பின்னர் பேட்டியளித்த ஜெயக்குமார், கட்சியின் வளர்ச்சிக்கு ஒற்றைத் தலைமை தேவை என பெரும்பாலான நிர்வாகிகள் தெரிவித்ததாகவும், யார் தலைமை என்பது கட்சிதான் முடிவு செய்யும் என்றும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments