குழந்தையை பெற்றெடுத்த 3 நாட்களில் இளம்பெண் உயிரிழப்பு ; உரிய நேரத்தில் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கவில்லை என உறவினர்கள் குற்றச்சாட்டு

குழந்தையை பெற்றெடுத்த 3 நாட்களில் இளம்பெண் உயிரிழப்பு
திருவாரூர் அரசு மருத்துவமனையில் குழந்தையை பெற்றெடுத்த மூன்றே நாட்களில் உடல்நலக்குறைவால் இளம்பெண் உயிரிழந்த நிலையில், உரிய நேரத்தில் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பர்வீன் பானு என்ற அந்த பெண்ணுக்கு கடந்த 11ம் தேதி சுகப் பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. இன்று காலை அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்ட நிலையில், சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்தார்.
அப்போது மருத்துவர்கள் யாரும் பணியில் இல்லை என உறவினர்கள் குற்றஞ்சாட்டினர். இந்நிலையில், இது குறித்து மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் தலைமையில் விசாரணை நடத்த மருத்துவமனை டீன் ஜோசப் ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
உயிரிழந்த பெண்ணுக்கு ஏற்கனவே இருதய கோளாறு இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Comments