கையில் கத்தி.. வாயில் புகை.. போலீஸ் கார் மீது ஏறி ரகளை.. கஞ்சா மாப்பிள்ளைக்கு உரியடி..!

0 3022
கஞ்சா போதையில் வீதியில் இறங்கி கையில் கத்தியுடன் வாகனங்களை அடித்து உடைத்து தாக்குதலில் ஈடுபட்ட கஞ்சா குடிக்கி இளைஞன் ஒருவன் போலீஸ் ரோந்து வாகனத்தின் மேல் ஏறி அமர்ந்து கொண்டு அட்டகாசம் செய்ததால் தர்ம அடி கொடுத்து கைது செய்யப்பட்டுள்ளான்.

கஞ்சா போதையில் வீதியில் இறங்கி கையில் கத்தியுடன் வாகனங்களை அடித்து உடைத்து தாக்குதலில் ஈடுபட்ட கஞ்சா குடிக்கி இளைஞன் ஒருவன் போலீஸ் ரோந்து வாகனத்தின் மேல் ஏறி அமர்ந்து கொண்டு அட்டகாசம் செய்ததால் தர்ம அடி கொடுத்து கைது செய்யப்பட்டுள்ளான்.

சென்னை பாடிக்குப்பத்தில் ரவுடி நந்தாவின் தம்பி யுவராஜ் என்பவன் கையில் கத்தியுடன் ரகளையில் ஈடுபட்டான், அவனை எச்சரித்த நபரை, அந்த கஞ்சா குடிக்கி கத்தியால் வெட்ட முயன்றதால் உறவினர்கள் பதறிப்போய் கத்தி கூச்சலிட்டனர்.

அவனை பிடிக்க வந்த போலீசாரிடம் பிடி கொடுக்காமல் தன் மீது எப்படி கை வைக்கலாம் என்று சட்டம் பேசிய யுவராஜ் போலீசுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு தப்பிச்சென்று விட்டான்.

இதே போல தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத் நகருக்குட்பட்ட அபீப் நகர் பகுதியில் கஞ்சா போதையில் கையில் கத்தியுடன் சாலையில் இறங்கி ரகளையில் ஈடுபட்ட இளைஞர்கள் வாகனங்கள் மீது கல்வீசு தாக்குதலில் ஈடுபட்டனர். சில வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

போலீசை கண்டதும் மற்றவர்கள் ஓட்டம் பிடிக்க ஒருவன் மட்டும் கடுமையான அட்டகாசத்தில் ஈடுபட்டான்.

அவனது கையில் கத்தி இருப்பதை கண்டு அவனை நெருங்க மக்கள் அஞ்சினர், போலீசார் அவனை மடக்கிப்பிடிக்க முயல , அவனோ போலீசாரின் ரோந்து வாகனத்தின் பின்பக்க கண்ணாடியை உடைத்து குரங்கு போல காரின் மீது ஏறி அமர்ந்தான்.

போலீஸ் காரின் சைரன் மீது அரை நிர்வாண பக்கிரியாக அமர்ந்து கொண்டு அட்டகாசம் செய்தவனை , பிரேக் அடித்து கீழே இறங்க வைக்க போலீசார் முயல, காரின் பேனட் மீது அமர்ந்து கொண்டு இறங்கமறுத்தான்.

கஞ்சா குடிக்கியின் அட்டகாசத்தால் நொந்து போன போலீசார், அவனுக்கு லத்தியால் புத்திபுகட்டினர். இறங்கி ஓட முயன்றவனை மடக்கிப்பிடித்து முட்டிக்கு முட்டி உரித்து எடுத்தனர்.

அத்தனை அடிவாங்கியும் தப்பி ஓட முயன்ற கஞ்சா குடிக்கியை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவன் அஜய் என்பதும் கூட்டாளிகளுடன் கஞ்சா குடித்து அட்டகாசத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

தமிழகம் மற்றும் தெலங்கானாவில் நடை பெற்ற இந்த இரு சம்பவங்களுமே கஞ்சா ஒரு இளைஞனை என்ன வெல்லாம் செய்ய தூண்டுகின்றது என்பதற்கான சான்றுகள் . சமூகத்தில் கஞ்சா எந்த அளவுக்கு மோசமான போதை என்பதை உணர்ந்தாவது போலீசார் போதை கும்பல் மீது இரும்புக்க்ரம் கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments