நாளை 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

0 2724
வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் நாளை 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் நாளை 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில்,  வரும் 17ஆம் தேதி தேனி, கடலூர், நீலகிரி உள்ளிட்ட 9 மாவட்டங்களிலும், 18ஆம் தேதியன்று திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பூர்  உள்ளிட்ட 8 மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments