போதை விருந்தில் பங்கேற்றதாக கைது செய்யப்பட்ட பாலிவுட் நடிகர் சக்தி கபூரின் மகன் சித்தாந்த் ஜாமினில் விடுவிப்பு..!

0 1884
போதை விருந்தில் பங்கேற்றதாக கைது செய்யப்பட்ட பாலிவுட் நடிகர் சக்தி கபூரின் மகன் சித்தாந்த் ஜாமினில் விடுவிப்பு..!

பெங்களூருவில் போதை விருந்தில் பங்கேற்றதாக கைது செய்யப்பட்ட பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூரின் சகோதரர் சித்தாந்த் கபூர் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் இரவு நட்சத்திர விடுதியில் நடந்த போதை மருந்து விருந்தில் பங்கேற்ற சித்தாந்த் கபூர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், சித்தாந்த் கபூர் உள்பட 5 பேரையும் ஜாமினில் விடுவித்துள்ள பெங்களூரு போலீசார், விசாரணைக்கு அழைக்கும்போது  ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments