சப்பரம் கவிழ்ந்து உயிரிழந்த 2 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் உதவி.. அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் நேரில் வழங்கினார்..!

0 1824
சப்பரம் கவிழ்ந்து உயிரிழந்த 2 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் உதவி.. ..அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் நேரில் வழங்கினார்

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் சப்பரம் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதியை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் நேரில் சென்று வழங்கினார்.

தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள மனோகரன் மற்றும் சரவணன் உடல்களுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய அமைச்சர், பின்னர் சிகிச்சை பெற்றுவரும் 4 பேரையும் சந்தித்து ஆறுதல் கூறி தலா 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை அவர்களிடம் வழங்கினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments