வாங்கிய பணத்தை கொடுக்க முடியாமல் தவித்த பெண்.. பெண்ணின் வீடு புகுந்து பணத்தைக் கேட்டு மிரட்டிய 3 பேர் கைது..!
வாங்கிய பணத்தை கொடுக்க முடியாமல் தவித்த பெண்.. பெண்ணின் வீடு புகுந்து பணத்தைக் கேட்டு மிரட்டிய 3 பேர் கைது..!
மதுரையில், உடல்நலக்குறைவால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவித்த பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பணம் கேட்டு மிரட்டிய 3 பேர் கந்துவட்டி தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
ஜெர்மனி என்ற அந்த பெண், சித்திரை அழகு என்பவரிடம் 50 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். ஜெர்மனியின் கணவர் அவரை பிரிந்து சென்றுவிட்ட நிலையில், மில்லில் கூலி வேலை செய்து குழந்தைகளை காப்பாற்றி வந்த அவர் உடல்நலக்குறைவால் கடனை செலுத்த முடியாமல் தவித்து வந்துள்ளார்.
இந்நிலையில், பணத்தைக் கேட்டு சித்திரை அழகு, லட்சுமி, மோகன்ராஜ் ஆகிய 3 பேர் தனது வீடு புகுந்து தகாத வார்த்தையில் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக ஜெர்மனி அளித்த புகாரின் பேரில், மூவரையும் போலீசார் கைது செய்தனர்.
Comments