பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு உள்ளேயே துணிகர கொள்ளை.. ரூ.27 லட்சம் பணத்தை பறித்துச் சென்ற மர்மநபருக்கு வலைவீச்சு..!

0 2430
பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு உள்ளேயே துணிகர கொள்ளை.. ரூ.27 லட்சம் பணத்தை பறித்துச் சென்ற மர்மநபருக்கு வலைவீச்சு..!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை பத்திரப்பதிவு அலுவலகத்திலேயே  27 லட்சம் ரூபாயினை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

பெரிய எலந்தம்பட்டைச்  சேர்ந்த நந்தபிரவீனுக்கு சொந்தமான 15 சென்ட் இடத்தை அதே கிராமத்தைச் சேர்ந்த சிவகண்டன் என்பவர் 47லட்சம் ரூபாய்க்கு வாங்க முடிவு செய்து 20லட்சம் ரூபாய் முன்பணமாக கொடுத்துள்ளார்.

மீதி 27 லட்சம் பணத்தை பத்திரம் பதிவு செய்யும் போது தருகிறேன் என சிவ கண்டன் கூறியிருந்துள்ளார். இதன் காரணமாக   பண்ருட்டி அருகே புதுப்பேட்டை பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு நந்தபிரவீனும் அவரது தாயும் வந்துள்ளனர்.

அப்போது சார்பதிவாளர் எதிரிலேயே கையெழுத்து போடும் போது,திடீரென அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் சிவகண்டன் கையில் இருந்த பணத்தை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி ஓடி உள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த நந்த பிரவின் மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டுள்ளனர். தகவல் அறிந்த புதுப்பேட்டை போலிசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments