முதல்வர் பினராயி விஜயன் பயணித்த விமானத்தில் பதவி விலகக் கோரி கோஷம் எழுப்பிய இருவரை தாக்கிய கம்யூனிஸ்ட் கட்சியினர்..!

0 2610
முதல்வர் பினராயி விஜயன் பயணித்த விமானத்தில் இருவர் கோஷம்.. பதவி விலகக் கோரி போராட்டம்..!

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பதவி விலக் கோரி அவர் பயணித்த விமானத்தில் கோஷம் எழுப்பிய இருவரை, கம்யூனிஸ்ட் கட்சியினர் தாக்கும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

கண்ணூரில் இருந்து விமானம் மூலம் பினராயி விஜயன் திருவனந்தபுரம் வந்தார். விமானத்தில் இருந்து இறங்க இருந்தவரை நோக்கி, பதவி விலகுமாறு இரு காங்கிரஸ் தொண்டர்கள் கோஷம் எழுப்பினர்.

இளைஞர்களை கம்யூனிஸ்ட் கட்சியினர் தாக்கி தள்ளினார். சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. தங்க கடத்தல் வழக்கில் பினராயி விஜயனை பதவி விலகக் கோரி காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments