எல்லை மேலாண்மை... இந்தியா- பாகிஸ்தான் பேச்சு..!

0 1189

எல்லை மேலாண்மை குறித்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் பிரதிநிதிகள் ஆலோசனை நடத்துகின்றனர். 

எல்லை மேலாண்மை குறித்த ஷாங்காய் ஒத்துழைப்பு ஆலோசனைக் கூட்டத்தில் இந்தியா - பாகிஸ்தானின் ராணுவம் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் ஆலோசனை நடத்துகின்றனர்.

இந்தியா சீனா, ரஷ்யா உள்ளிட்ட உறுப்பு நாடுகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கும் என எதிர்பார்க்கபடுகிறது. நாளை தொடங்கும் ஆலோசனைக் கூட்டம் 17ஆம் தேதி நடைபெறும் தலைவர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையுடன் நிறைவு பெறும். சீனாவுடனான எல்லை பிரச்சினைகள் மற்றும் பாகிஸ்தானுடனான உறவுகள் முடக்கம் குறித்த கூட்டத்தில் பேச இந்தியா எதிர்ப்பு தெரிவிக்கும்.

ஐ.நா.வின் சாசனம், இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு, பேச்சுவார்த்தை, பரஸ்பர ஆலோசனை மூலம் மோதல்களுக்கு அமைதியான தீர்வு, மற்ற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடாமை மற்றும் ராணுவ பலத்தை பயன்படுத்தாமை உள்ளிட உறுதிப்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்படும்.

இந்தியா, பாகிஸ்தான், ரஷ்யா, சீனா உள்ளிட்ட 9 நாடுகள் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments