கோவில் கும்பாபிஷேகத்துக்கு ஹெலிகாப்டரில் பறந்த இரும்பு வியாபாரி.. வியந்து போன மக்கள்.!

0 2404
குடும்பத்தினரின் ஹெலிகாப்டர் பயண கனவை நிறைவேற்றும் விதமாக, இரும்பு வியாபாரி ஒருவர், தூத்துக்குடி மாவட்டத்தில் தனது சொந்த கிராமத்தில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவிற்கு குடும்பத்தினரை ஹெலிகாப்டரில் அனுப்பி வைத்தார்.

கும்மிடிப்பூண்டியில் இரும்புக்கடை நடத்தி வரும் பாலசுப்பிரமணியன் என்பவரின் மூத்த மகனும், பேரனும் ஹெலிகாப்டரில் பயணம் செய்ய ஆசைபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

அதனை நிறைவேற்ற நினைத்த பாலசுப்பிரமணியன், பெங்களூருவில் உள்ள தனியார் ஹெலிகாப்டர் நிறுவனத்தின் மூலம் தனது குடும்பத்தினர் 5 பேர் தூத்துக்குடி மாவட்டத்தில் சொந்த கிராமத்தில் நடைபெறும் கும்பாபிஷேக விழாவிற்கு செல்ல ஏற்பாடு செய்தார். தீத்தாம்பட்டி கிராமத்தை 2 முறை சுற்றிவிட்டு தரை இறங்கிய ஹெலிகாப்டரை மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments