பெண் சித்த மருத்துவர் கொலை வழக்கில் 20 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது

0 2003
சென்னையில், பெண் சித்த மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 20 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னையில், பெண் சித்த மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 20 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

2002 ஆம் ஆண்டு, சித்த மருத்துவரான மலர்கொடியை அவரது வீட்டில் வேலை பார்த்து வந்த அழகர்சாமி என்பவன், தனது சகோதரன் ராமகிருஷ்ணன் மற்றும் நண்பர் சக்திவேலுடன் சேர்ந்து கொலை செய்து விட்டு 5 சவரன் நகை, ஒரு லட்சம் பணத்துடன் தப்பி ஓடினான்.

அடுத்த சில நாட்களில், அழகர்சாமியும் அவனது நண்பனும் கைது செய்யப்பட்ட நிலையில், ராமகிருஷ்ணன் தலைமறைவாக இருந்து வந்தான்.

திண்டுக்கல் மாவட்டத்தில் அவன் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் போலீசார் விரைந்து சென்று அவனை கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments