கோவில் திருவிழாவின் போது கவிழ்ந்து விபத்துக்குள்ளான சப்பரம்.. பதறவைக்கும் வீடியோ காட்சிகள்.!
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே கோவில் திருவிழாவின் போது சப்பரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர்.
மாதேஹள்ளி கிராமத்தில் காளியம்மன் கோவிலில் திருவிழா நடைபெறும் நிலையில், முக்கிய நிகழ்ச்சியாக இன்று சப்பர ஊர்வலம் நடைபெற்றது. அப்போது, வயல்வெளி அமைந்த பகுதியில் சப்பரம் சென்றபோது போது திடீரென அதன் சக்கரத்தின் அச்சாணி முறிந்தாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து, சப்பரம் சரிந்து விழுந்ததில் அதற்கு அருகே நின்றவர்கள் அதில் சிக்கிக் கொண்டனர்.
இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில், 3 பேர் தருமபுரி அரசு மருத்துவமனையில் படுகாயத்துடன் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதனிடையே, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஐந்து லட்சம் ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
Comments