சேலையூரில், கஞ்சா போதையில் உணவகத்தில் ரகளை.. சமையல் மாஸ்டரைத் தாக்கி விட்டுத் தப்பி ஓட்டம்

0 2042
சென்னை அருகே, கஞ்சா போதையில் சமையல் மாஸ்டாரை தாக்கியதுடன், பட்டாக்கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டி விட்டு காரில் தப்பி சென்ற 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை அருகே, கஞ்சா போதையில் சமையல் மாஸ்டாரை தாக்கியதுடன், பட்டாக்கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டி விட்டு காரில் தப்பி சென்ற 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

சேலையூரில் உள்ள ஒரு துரித உணவகத்துக்கு கஞ்சா போதையில் வந்த 3 பேர் அங்கு உணவருந்தி கொண்டிருந்தவர்களை கிண்டல் அடித்ததாக கூறப்படுகிறது. இதனை சமையல் மாஸ்டர் தட்டிக்கேட்டதால் அந்த கும்பல் அவரை தாக்கி விட்டு காரில் தப்பி செல்ல முயன்றனர்.

அங்கிருந்தவர்கள் அவர்களது காரை சூழ்ந்துகொண்டதை அடுத்து பட்டாக்கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டி விட்டு தப்பி சென்றனர். சிசிடிவி காட்சிகள் உதவியுடன் போலீசார் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments